முடி வளருவதற்கான மிக எளிய டிப்ஸ்

 

ஊட்டசத்தான  உணவு  ;

ஊட்டசத்துக்கள்  அடங்கிய  உணவு வகைகளை  தேர்ந்தெடுத்து சாப்பிட்டு  வந்தாலும்  முடி உதிர்வது குறையத்  தொடங்கும்  .குறிப்பாக  பொன்னாங்கண்ணி ,கரிசலாங்கண்ணி ,வல்லாரை ,அகத்திக்கீரை  உள்ளிட்ட  கீரை வகைகளும்  ,சப்போட்டா மற்றும் நாகப்பழம்  போன்றவையும்  சாப்பிட்டு வர கூந்தல் உதிர்வது குறைவதோடு  நன்றாக  வளரவும்  தொடங்கும் .அதோடு கருவேப்பில்லை நெல்லிக்காய் சாப்பிடுவதும்  நல்லது .

 

 

சூடான  ஆயில்  மசாஜ் ;

முடி  உதிர்வதைத்  தடுக்கவும்  அதை  நன்கு வளர செய்யவும்  காய் கொடுக்கும் எளிய  ட்ரீட்மெண்ட்  சூடான  ஆயில்  மசாஜ்  தான் சிறந்த  முறை . தேங்காய் எண்ணெய் ,நல்லெண்ணெய் அல்லது ஆலிவ்  எண்ணெய் இவற்றில் எதையாவது ஒன்றாய்   சுமார் ஆறு டேபிள்  ஸ்பூன்   எடுத்து   லேசாக  சூடுபடுத்தி  கொள்ளுங்கள் .வெதுவெதுப்பான   இந்த எண்ணெய்யை  தலையில் ஊற்றி இரண்டு கைகளாலும்  நன்றாக  மசாஜ்  செய்ய வேண்டும் .

 

 

மசாஜ் எப்படி செய்வது ?

தலையில் சீராக  எண்ணெய்  தடவியதும்  உங்கள்  விரல் நுனிகளால்  தலை  முழுவதும்  சின்ன சின்ன வட்டங்களாக  மசாஜ்  செய்து விடுங்கள் . ஒரு முறை  மேலிருந்து  கீழ்  நோக்கியும்  மற்றொரு  முறை  கீழிருந்து  மேல்  நோக்கியும்   இதே போல மசாஜ்  செய்ய  வேண்டும் .இப்படி செய்யும் போது  முடியை  கசக்கவோ  ,சிக்காகவோ  கூடாது .

 

தலைக்கு  பரவலாக  மசாஜ் செய்து  முடிந்ததும்  நெற்றியில்  பொட்டு வைக்கும் இடத்தில  சுட்டு   விரலால்  வட்ட வடிவில்  தேய்த்து அழுத்தம் தாருங்கள்  .அடுத்ததாக   நெற்றி பொட்டுக்கும்  பிறகு   மேல்  நெற்றியிலும்  , உச்சியிலும்  பின் மண்டையிலும் ,கடைசியாக   காதின்  பின்புறமுள்ள  குழி  பகுதிகளிலும்  இதே போல  வட்ட வடிவில்  விரல்களால்   மாசாஜ் செய்ய வேண்டும்  ,ஒவ்வொரு  பகுதியிலும்  குறைந்து இருபது  முறை  மசாஜ்  செய்துவிட வேண்டும்  .

மசாஜ் செய்து முடித்ததும்  வெந்நீரில்   டர்க்கி   டவல்  ஒன்றை நன்றாக நனைத்து பிழிந்து  அதில் கூந்தலை  மொத்தமாக   அள்ளி தலையின் உச்சியில்  முடிந்து கொள்ளுங்கள் ,இதே போல மூன்று  முறை   செய்து   வந்தால்   தலையில்  தடவியுள்ள   எண்ணெய் உள்ளுக்குள்   எளிதாக  இறங்கும் .வாரத்துக்கு   இரண்டு  முறை இப்படி    தலைக்கு  சீயக்காயையோ  அல்லது  தரமான  ஷாம்பூவையோ தடவி குளிக்க வேண்டும் .

குறிப்பு ; அதிகப்படியான சூட்டை  வெளியேறவிடாமல் உள்ளே  அதிக நேரம்  தங்கச் செய்யும்  தன்மை   டர்க்கி  டவலுக்கு உள்ளதால்  டான்  இதை  நாம் பயன்படுத்துகிறோம் .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *