தனியார் பள்ளிக்கு இணையாக கல்வித்தரத்தை உயர்த்துவோம் – செங்கோட்டையன்:

ஏழை எளிய மாணவர்கள் சிறந்த கல்வியை பெறும் விதத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை இன்று கூடியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். சட்டமன்ற உறுப்பினர் சத்தியா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளை கொண்டு வந்து தனியார் பள்ளிகளை மிஞ்சுகிற அளவுக்கு தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக சுட்டிக் காட்டினார்.

மேலும் பண்ரூட்டி பெண்கள் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

விவசாய நிலங்கள் பறிப்பு : தேர்தல் வாக்குறுதிகளின் அவலம்


தூத்துக்குடி கயத்தாரில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 400 ஏக்கர் விவசாய
நிலங்களை எந்த நோட்டிசும் வழங்காமல் பட்டா நீக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து
தூத்துக்குடி தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி போராட்டம் நடத்தப்போவதாக
தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் கோரிக்கையில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம்
விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று சொல்வது உண்மைதான். ஒட்டுமொத்த விவசாய
நிலத்தையும் அபகரித்துக் கொண்டாள் விவசாயக் கடனே வராது என்பதால் தான் அவ்வளவு
தைரியமா வாக்குறுதி கொடுத்தார்கள் .

இந்நிலையில் கோவையில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6000ம் ரூபாய் நிதியுதவி அளிக்கும்
மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் விவசாய அணியினர் மோடிக்கு
17 ரூபாய் வரைவு காசோலையை விரைவு தபாலில் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசும், எதிர்கட்சிகளும் மாறி மாறி அறிக்கைகள் விடும்
இந்தச் சமயத்தில் விவசாயப் பட்டாக்கள் அபகரிப்பு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விமானநிலையத்துக்கு மீனாட்சியம்மன் பெயர் – ஆறுமாதம் கெடு


மதுரை விமான நிலையத்திற்கு மதுரை மீனாட்சியம்மன் பெயரை வைக்கக்கோரி மனுவை
பரிசீலித்து ஆறு மாதத்திற்குள் உரிய முடிவெடுக்க மத்திய விமான போக்குவரத்துத் துறைக்கு
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்திரவிட்டுள்ளது.

கோவில் நகரமான மதுரை மாநகரத்தில் முக்கிய ஐக்கான பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி
அம்மன் கோவில் விளங்குகிறது. மதுரை விமானநிலையத்துக்கு சாதிய தலைவர்களின்
பெயரை வைக்க அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை வைத்துள்ளதை
அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். மதுரையின் அடையாளமாக விளங்கக் கூடிய
மதுரை மீனாட்சி அம்மனை வைப்பதால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்பதை
மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்டது.

பொதுவாக சில இடங்களைத் தவிர பெரும்பாலன அரசு பொதுவுடைமை இடத்திற்கு
இறந்தவர்களின் பெயரைத் தான் சூட்டுவார்கள். வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுளுக்கு எதற்கு

விமான நிலையத்தில் பெயர். இவர்கள் பெரியார் சிலைக்கே மதுரை வீரன் என்று பெயர்
வைப்பார்கள்.

உயிருக்கு போராடிய போதும் ஓட்டுனர் செய்த செயல் : இறுதியில் ஏற்பட்ட விபரீதம்


வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் அடுத்த பேரம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.
திருப்பத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம்போல பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூரில் இருந்து சென்னை
நோக்கி வந்த அவருக்கு நெற்குன்றம் அருகே வந்துக் கொண்டிருக்கும்போது திடீரென
மாரடைப்பு ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் ரமேஷ் பேருந்தை ஓரமாக
நிறுத்திவிட்டு தன்னுடைய இருக்கையில் இருந்தபடியே ஆட்டோவை அழைத்தார்.

ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஓட்டுனர் ரமேஷ் பரிதாபமாக
உயிரிழந்தார். அத்தனை பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனர் பயணித்த
பயணிகளுக்கு சாமியானார்.இவரது இழப்பு பயணிகள் மற்றும் பொதுமக்களை துயரத்தை
ஆழ்த்தியது. இனியாவது ஓட்டுனரை மதிப்போம்.

மணல் திருட்டு : ஆட்சியாளர்களை நோக்கி நீதிபதிகள் சரமாரி கேள்வி


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மணல் அள்ள இடைகால தடைவிதித்து
உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்திரவிட்டுள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த
நீதிபதிகள் கிருபாகரன் சுந்தர் சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது என்ன
நடவடிக்கை எடுத்துள்ளது. எத்தனை வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது என கேள்வி
எழுப்பினார்.

மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு
விசாரணை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்றம் உத்திரவிட்டாலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் மணல் திருட்டு நடந்து
கொண்டுதான் இருக்கும். 500 ரூபாய்க்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஏராளமானோர்
இருக்கிறார்கள்.

கள்ளக்காதலர்கள் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்காதலர்கள் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து
ஆயக்குடி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தற்போதைய காலத்தில் தற்கொலை என்ற வார்த்தை மிகச் சுலபமான ஒன்றாக மாறிப்
போயிருக்கிறது.  வாழ்வை எதிர்கொள்கிற தைரியம் இந்த காலகட்டத்தில் வாழும்
சமூகத்தினரிடம் இல்லை.

காதல் தோல்விக்கு தற்கொலை, குடும்பச் சண்டையினால் தற்கொலை, ஆசிரியர் திட்டியதால்
மாணவர் தற்கொலை என்ற வரிசையில் கள்ளக்காதலர்கள் அடுத்தடுத்து விஷமறிந்து
தற்கொலை என்ற செய்தியும் இணைந்துள்ளது.

சகாயம் 19 என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி


சகாயம் 19 என்ற மாற்று திறனாளிகளுக்கான நிகழ்ச்சி கோவை  பெர்ஸ்
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சி மாற்று திறனாளிக்கான இசை,  நடனம்,
கட்டுரை,  ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.  இப்போட்டியில் 500க்கும்
மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு
சான்றிதழ்களும் கோப்பைகளும் மற்றும் காசோலை வழங்கப்பட்டது.

சகாயத்தின் மக்கள் பாதை மூலமாக பொதுமக்கள் மற்றும் இளைஞருக்கான நலத்திட்டங்கள்
தொடர்ந்து செய்யப்ப்பட்டு வருகிறது.  குறிப்பாக கைத்தெறி நெசவாளர்களைப் பாதுகாக்கும்
திட்டம், சகாயம் இ.ஆ.ப (IAS) பயிற்சி வகுப்புகள் என பல்வேறு மக்களுக்கான திட்டங்கள்
சகாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.  அந்த வகையில்
தான் மாற்றுத் திறனாளிகளுக்கான இந்தப் போட்டியும் பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் கனிமொழியே நின்றாலும் அதிமுக வெல்லும்

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பர்
துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை
வழங்கி கௌரவித்தார்.

பட்டமளிப்புக்கு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ
தம்பிதுரை பலநேரங்களில் தெரிவிக்கும் கருத்துகள் அவரது சொந்தக் கருத்தாகவே பார்க்க
வேண்டும். அதிமுக ஜனநாயகக் கட்சி எனவும் இங்கு அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும்
உரிமை அனைவருக்கும் இருப்பது போல தம்பிதுரைக்கும் இருக்கிறது எனக் கருத்து
தெரிவித்தார். ஆனால் கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர், இணை
ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுகவின் பொறுப்பாளர்கள் கூடி முடிவெடுத்து
அறிவிப்பார்கள்.

தூத்துக்குடி நாடளுமன்றத் தொகுதியில் கனிமொழி உட்பட யார் எதிர்த்து நின்றாலும்
அதிமுக தலைமை அறிவிக்கிற வேட்பாளர் தான் வெற்றி பெறுவார். கடந்து நாடாளுமன்றத்
தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற எங்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியம்
இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு
வந்துள்ளது. இதனையொட்டி பயணிகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று
ஒரு நாள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. பயணிகளிம்
வருகை அதிகரிக்கவே பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தில்லி மெட்ரோ இருப்பு வழி கழகத்தின் தலைவராக இருந்த ஸ்ரீதரன் அவர்களால் முன்னாள்
முதல்வர் செல்வி ஜெயலலிதாவிடம் தமிழக மெட்ரோ திட்டத்திற்கான முன்வரைவு
அளிக்கப்பட்டது. ஆனால் அந்த முன்வரைவு அப்போதைக்கு கிடப்பில் போடப்பட்டது.
2006ல் ஆட்சிக்கு வந்த திமுகவால் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதைய
துணைமுதல்வர் முக ஸ்டாலினால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

மூன்று வழித்தடங்களில் இயக்கப்படும் இந்த மெட்ரோ இரயில்களின் பணிகள் முழுவதுமாக
இயக்கப்பட்ட நிலையில் பயணிகளுக்காக இன்று ஒரு நாள் இலவசமாக இயக்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரம் – மமக

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் 11ஆம்
ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் மத்திய அரசும் மதவாத
போக்கும் என்ற தலைப்பில் பிரச்சாரம் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் சையது மூஸா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திராவிடர்
கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு
உரையாற்றினர்.

இந்துக்களுக்கு எதிராக திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் செயல்படுவதாக
ஹெச்.ராஜா குற்றம் சாட்டிய நிலையில் இந்த நிகழ்வு அரசியல் வட்டத்தில் சிறு சலசலப்பை
ஏற்படுத்தியுள்ளது.