கேரளா டாப் 5 சுற்றுலாத் தளங்கள்

தமிழக மக்களிற்கு ஊட்டி கொடைக்கானல் அடுத்து கேரளா மிகப்பெரிய சுற்றுலாத் தளமாக இருந்து வருகிறது. இதற்கு மிகப்பெரிய காரணமாக கருதுவது இயற்கை எழிலும் குளிர்ந்த காற்றும் தான்.

அதுமட்டுமில்லாமல் இங்குள்ள கார்த்திக்குகள் தன்னுடைய ஜெஸியை தேடி அங்கு விசிட் அடிக்கத் தவறுவதில்லை. புதுமணத் தம்பதிகளுக்கு இது பேவரட் ஸ்பாட் தான்.

இயற்கை அரசியின் பிராஞ்ச்களில் ஒன்றான கேராளாவில் விசிட் செய்ய ஆசைப்பட்டால் தவறாமல் இந்த இடங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணிடாதீங்க..

ஆலப்புழா:

ஆலப்புழா என்றால் அனைவருக்கு நினைவுக்கு  வருவது கடற்கரையும் கலங்கரை விளக்கமும் தான் அனைவருக்கும் நியாபகம் வரும். அதை விட மிக முக்கியமானது போட் ஹவுஸ்கள் தான். ஊட்டியின் எழிலைக் காண மலை இரயில்கள் எப்படி இயக்கப்படுகிறதோ அதற்கு ஈடாக கேராளவின் எழிலைக்  காண ஆலப்புழா போட் ஹவுஸ் சவாரிகள் இயக்கப்படுகின்றன. படுக்கை அறைகள் உணவு, குளிக்கும் வசதிகள் என ஒரு வீட்டில் கிடைக்கும் அத்தனையும் போட் ஹவுசுகளில் கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில் இந்தப் பயணத் திட்டத்தை வைத்துக் கொண்டால் சிறப்பான அனுபவத்தை அடைய இயலும்.

மூணார்:

மலைப் பிரதேசம் என்றாலே நினைவுக்கு வருவது தேயிலைத் தோட்டங்களும் காபித் தோட்டங்களும் தான். மூணாரிலும் அதே தேயிலைத் தோட்டங்கள் தான் இருக்கப்போகிறது என்று வாதிடப் போகிறவர்களுக்கு மலைப்பிரதேசத்தில் உள்ள சைட்சீயிங் பகுதிகள் தான் மிகச் சிறப்பானதாக் இருக்கும். குளிர்மையான சூழலில் இயற்கை எழிலை காண்பது என்பது மனதிற்கு ஒரு வித புத்துணர்ச்சியை அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல்  இறவிக்குளம் தேசியப் பூங்கா, மேட்டுப்பட்டி டேம் என பார்ப்பதற்கு இடங்கள் இங்கே நிறைய இருக்கின்றன.

கோழிக்கோடு:

டச்சுக்காரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த இடம் கோழிக்கோடு என்றால் மிகையல்ல. இங்குள்ள கட்டிடங்களில் டச்சுக்காரர்களின் கட்டிடக்கலை சாயல் கட்டாயம் இருக்கிறது. உணவு விரும்பிகள் கட்டாயம் இந்தப் பகுதிகளுக்கு கட்டாயம் விசிட் செய்ய வேண்டும் கோழிகோடு கடற்கரை , புகழ்பெற்ற சிவன் கோவில், பழசிராசா மியூசியம், பேபார் கடற்கரை என ஆசியாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களின் கூடாரமாக கோழிக்கோடு திகழ்கிறது. செப்டம்பரிலிருந்து மே வரை இங்கு சுற்றிப் பார்க்கத் தகுதியான நேரமாக கருதப்படுகிறது.

இடுக்கி:

ட்ரெக்கிங் செல்ல இளைஞர்கள் அதீத ஆர்வம் காட்டுவார்கள். அப்போது கண்டிப்பாக இடுக்கி சிறந்த இடமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கையை ரசிப்பவர்க்கும் மாதம் ஒரு நாள் விடுப்பு எடுத்து தன்னை இயற்கைக்கு கொடுப்பவர்க்கு இடுக்கி ஒரு சொர்க்கமாகும். இடுக்கி  அணை சீயப்பாறை நீர் வீழ்ச்சி சலிம் அலை பறவைகள் சரணாலயம்  சுற்றிப்பார்க்க சிறந்த இடம். ஜூன் ,ஆகஸ்ட் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி இங்கு சுற்றுலா செல்லச் சிறந்த இடம்.

திரிசூர்:

கேரளா கலாச்சாரத்தைப் பற்றி புரிந்துகொள்ள நாம் திரிசூரை விசிட் அடித்தால்  போதும் இங்கு நடக்கும் பூரம்  திருவிழா மிகவும் பிரசித்துப் பெற்றவை ஆகும். இதற்காக பெரும் மக்கள் கூட்டம் கூடும். இங்குள்ள வலச்சல் நீர்வீழ்ச்சி பகவதி அம்மன் கோவில், அதிரபள்ளி நீர்வீழ்ச்சி ஆகியவை நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்.