வீட்டில் வைத்து பிரசவம் பாக்கலாமா?

பெண்கள் தன்னை பெண்ணாக உணரும் தருணங்களில் தாய்மையை தான் இன்றியமையாததாக கருதுவாள். தமிழகத்தில் இயல்பான விஷயமாக கருதப்படும் சுகப்பிரசவம் குறைந்து போனதுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆக்கத்திற்கு பயன்பட்ட அறிவியலை அழிவிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். சுகப்பிரவசம் ஆகும் நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கூட சிசேரியன் மூலம் மருத்துவம் பார்க்கும் கதை செய்தித்தாள்களில் பார்க்கமுடிகிறது. அதுவும் சிகிச்சை தோல்வியடையும் போது தான் வெளிவருகிறது.

சுகப்பிரசவம் இல்லாமல் போனதுக்கு முக்கியமான காரணமாக நமது லைஃப்ஸ்டைலும் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதலுமே முன் வைக்கப்படுகிறது. அதில் தெளிவு கொண்டால் தாய்மார்களின் உடல் நலத்தில் தொல்லைகள் இல்லாமல் இருக்கும்.

வீட்டில் வைத்து பிரசவம் பாக்கலாமா:

பண்டைய தமிழகத்தில் வீட்டில் வைத்துதானே பிரசவம் பார்த்தோம் அதில் எந்த தவறும் நடக்கவில்லையே என்றெல்லாம் பலர் பேசக் கேள்விப்பட்டிருக்கோம்.

ஆனால் அதில் சில முரண்களும் முன்வைக்கப்படுகின்றன. அன்றைய காலத்தில் எல்லோருக்கும் இருந்த தேக நலன் இப்போது இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். அன்றைய காலத்தில் கிடைத்த சுத்தமான காற்றை இப்போது நாம் சுவாசிக்கிறோமா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இன்று பிறக்கும் குழந்தைக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்கிறார்கள். அப்படி இருக்கையில் வீட்டில் இருந்து பிரசவம் பார்க்கும் போது அசௌகரியம் ஏற்பாட்டால் என்ன செய்வது ?

பத்து மாதம் சுமந்து வலியும் வேதனையுமான காலங்கள் பெண்களுக்குத் தான் தெரியும் அந்த வலிகளை ஒன்னுமில்லாமல் ஆக்க பிறந்த குழந்தையால் முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் பிரசவத்தை மருத்துவமனையில் மட்டுமே பார்க்க வேண்டும்.

தலை சிறந்த மருத்துவச்சிகளை நாம் கொண்டிருந்தோம் என்றாலும் அந்த மருத்துவச்சிகளும் தற்போதைய சூழலில் அவர்களும் இல்லை என்பது தான் நிதர்சனம்.

குழந்தை கண்டிப்பாக அழவேண்டும்

பிறந்த குழந்தை பிறந்த உடனே அழ வேண்டும். அப்படி அழுதால் தான் குழந்தையால் சுவாசிக்க முடியும் இல்லையெனில் ஒன்று குழந்தை திணறிப்போகும்  அல்லது மூளை வளர்ச்சி குறைந்தாகிவிடும் என்கிறது மருத்துவ வல்லுனர்களின் ரிப்போர்ட்.

எனவே பிரசவத்தை மருத்துவமனையில் வைத்து பார்ப்பது தான் தற்போதைய சூழலில் சிறந்ததும் பாதுகாப்பானதும் கூட என்பதை நாம் தெளிவாகக் கொள்ள வேண்டும்.

 

 

மேற்கோள்கள்: திருமதி ராஜம் அனந்தராமன்