வீட்டின் வாசலில் இதெல்லாம் இருக்கனுமா?

வீட்டின் வாசலில் வேப்பிலை மா இலை என நிறையக் கட்டியிருப்பார்கள் அதில் எதைக் கட்டலாம் என்பதை தெரிந்து கொண்டு கட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.

நேர்மறையான எண்ணங்களைத் தர:

நேர்மறையான எண்ணங்கள் நம்மை வெற்றியை நோக்கி பயணப்பட வைக்கும். வீட்டிற்குள் நுழையும் வெளிநபர்களுக்கும் அதே தாக்கம் இருப்பது நமது முயற்சிக்கு வழிசேர்க்கும். அந்த வகையில் வாசலில் மாயிலையும், வேப்பிலையும் கட்டினால் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும்.

கோவில் மாலை:

கோவில்களில் நமக்கு மாலை போட்டாலோ அல்லது சாமியின் மேல் சாத்திய மாலையை கொடுத்தாலோ என்ன செய்வது என்ற குழப்பம் சிலருக்கு இருக்கத் தான் செய்யும்.

வீட்டிற்கு எடுத்து வரலாமா என்ற கேள்வி கண்டிப்பாக இருக்கும். ஒரு வேளை வீட்டிற்கு எடுத்து வரலாம் என முடிவு செய்தால் அதை வைப்பதற்கு இடம் இருக்கிறது. வீட்டு வாசலில் அதை மாட்டி வைக்கலாம். ஏனெனில் தெய்வத்தின் மீது சாத்தப்பட்ட அல்லது தெய்வத்திற்கு அர்ச்சிக்கப்பட்ட மாலை என்பது தெய்வீகத் தன்மை உள்ளதால் வீட்டில் துஷ்ட சக்திகள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் என்பது ஐதீகம்.

குங்குமம் தடவிய எலுமிச்சைப் பழம் :

குங்குமம் தடவிய எலுமிச்சைப்பழம் செவ்வாய் வெள்ளிகளில் வாசலின் இருதுருவங்களில் வைக்கப்படுகிறது அதை ஏன் எனச் சிந்தித்துள்ளோமா? செவ்வாய் வெள்ளி என்பது தெய்வகத்துக்கு உகந்த நாளாக இந்து சமய மக்களால் நம்பப்படுகிறது. எலுமிச்சை என்பது அம்மனுக்கு உகந்த பழமாக கருதப்படும் நிலையில் குங்குமம் வைத்து அம்மனை வீட்டிற்கு அழைப்பதாக பொருளில் இன்று வரை நடைமுறையில் உள்ளது.

கடைகள் வைத்திருப்பவர்கள் தினமும் எலுமிச்சையை இரண்டாக நறுக்கி வாசலில் வைப்பது வழக்கம். திருஷ்டிக்காக வைப்பதும் தெய்வீக கடாட்சம் பெருகி வியாபாரம் கலைத்தோங்கவும் இதைச் செய்கிறார்கள்.

வீட்டிற்குள் நுழையும் போது கிரக லக்‌ஷ்மியை வேண்டிக்கொண்டு சென்றால் வீட்டில் சந்தோசம் நிலைப்பது நிச்சயம்.