கொள்ளு லட்டு

தேவையான பொருட்கள்:

கொள்ளு                                          : 1 கப்

வெல்லம்                                          : 2 கப்

நெய்                                                  : 200 மிலி

முந்திரி, திராட்சை                       : தேவையான அளவு

ஏலக்காய் தூள்                              : ஒரு சிட்டிகை

சுக்குத்தூள்                                     : 2 சிட்டிகை

செய்முறை:

அடுப்புத்திரியை குறைவாக வைத்துக் கொண்டு கடாயில் கொள்ளுவை போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு தேவையான பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த கொள்ளுவுடன் வெல்லத்தை சேர்த்து கலக்கவும். கடாயில் நெய்யை ஊற்றி முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், சுக்குத் தூள் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவேண்டும். வறுத்த பொருட்களை கொள்ளு கலவையுடன் சேர்த்து உருண்டையாக பிடித்தால் கொள்ளு லட்டு தயார்.

குழந்தைகளுக்கு தீனிகள் தர வேண்டும் என்பது இப்போதைய சூழலில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. 1 ரூபாயில் ஆரம்பித்து வண்ண வண்ண பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் தான் இன்றைய குழந்தைகளால் விரும்பப்படுகிறது. அவர்களுக்கு பிடித்த இனிப்பான பண்டங்களை வீட்டிலேயே செய்து தருவது பெற்றோரின் கடமையாகும்.

மருத்துவப் பயன்கள்:

உடலில் பழுதடைந்த திசுக்களை சரிசெய்ய கொள்ளு பயன்படுகிறது. காலையில் ஊறவைத்த கொள்ளுவை தினமும் உண்டுவர கொழுப்பை குறைக்கும். சளி, காய்ச்சல், ஆஸ்துமா பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக கொள்ளு செயல்படுகிறது. சிறுநீரக கற்களை கரைக்கும். எலும்பு, நரம்புகள் வலுப்பெற வைக்கும். ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும். இரத்தத்தில் குளுக்கோசை அதிகரிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டிய உணவு. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.

சத்துக்கள்: புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து