அனுமனுக்கு வெற்றி மாலை சாத்துவது ஏன்?

சனிக்கிழமை தோறும் நடக்கும் பூஜைகளில் அனுமனுக்கு வடை மாலை, சுண்டல் மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை போன்ற மாலைகளை அணுவித்து வழிபடுவதை  பார்த்திருக்கிறோம். அதற்கான காரணம் என்னவென்பதை நாம் சிந்தித்தது உண்டா?

வெற்றிலை மாலை அணிவிப்பதற்கான காரணத்தை மட்டும் இதில் காண்போம்.

இராவணனால் கடத்தப்பட்டு அசோகவனத்தில் அடைக்கப்பட்ட சீதையைக் கண்டறிய அனுமன் தேடிச் சென்றனர். சீதையைக் கண்டறிந்த அனுமன் தான் வந்த காரணத்தை சொல்ல முற்பட்டான்.

ஆனால் இது இராவணனின் சூழ்ச்சியாக இருக்குமோ என சந்தேகித்து கணையாழியை எடுத்து காட்டினாள். அது எம்பெருமான் இராமனுடையது எனக் கண்டறிந்து விளக்கம் அளித்தார் அனுமன்.

அடியேன் சீதையைக் கண்டறிய பட்டபாடுகளை எடுத்துரைத்தார் அனுமன். தன்னைச் சுற்றியிருந்த வெற்றிலைக் கொடியை மாலையாக்கி அனுமனுக்கு சூட்டினாள் சீதை அந்த வழக்கமே இன்றும் கோவில்களில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டப்படுகிறது.